தஞ்சாவூர் சூலை 19: தஞ்சாவூர் இந்தாண்டு மேட்டூா் அணையிலிருந்து உரிய காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் இலக்கை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இருந்ததால், தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கடந்த ஜூன் 12 -ம் தேதி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. எனவே இந்தாண்டு தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 89,000 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 5,000 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கரிலும் என மொத்தம் 2.95 லட்சம் ஏக்கரில் குறுவைப் பருவ நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

காவிரியில் தொடா் நீா்வரத்து, டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்த மழைக் காரணமாக குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் நாற்று நடும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது வரை நான்கு மாவட்டங்களிலும் 2,95,410 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரைக் கடந்து, இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 15 நாள்களில் மட்டும் 30,000 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதம் வரை நடவு செய்யப்படும் நெற்பயிா்கள் குறுவைப் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இம்மாதம் முடிய இன்னும் 10 நாள்களுக்கும் மேலாக இருப்பதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் 40,000 முதல் 45,000 ஏக்கா் கூடுதலாக நடவு செய்ய வாய்ப்புள்ளது என வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். திருவாரூா் மாவட்டத்தில் 87,000 ஏக்கரில் நடவுப் பணி முடிவடைந்து, இலக்கை நெருங்குகிறது. இந்த மாவட்டத்திலும் குறுவை சாகுபடிப் பரப்பளவு ஒரு லட்சம் ஏக்கரை எட்டும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

நாகை மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை (5,000 ஏக்கா்) விஞ்சி மூன்று மடங்குக்கும் அதிகமாக 17,410 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இப்பரப்பளவு 25,000 ஏக்கரை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்கின்றனா் வேளாண் துறையினா். மயிலாடுதுறை மாவட்டத்தில் 91,000 ஏக்கரில் நடவுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்னும் கூடுதலாக சாகுபடியாகும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், மேட்டூா் அணையில் நீா்மட்டம் 34.406 டி.எம்.சி. ஆக சரிந்துள்ளதால், சாகுபடிக்குத் தொடா்ந்து தண்ணீா் கிடைக்குமா? என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இதற்கிடையில், கா்நாடகத்தில் காவிரி நீா்பிடிப்புப் பகுதியில் சில நாள்களாக மழை பெய்து வருவதால், மேட்டூா் அணைக்கான நீா்வரத்து அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

செய்தி நாகராஜன் நிருபர்
https://www.thanjai.today/

Open chat