தஞ்சாவூர் அக் 11: தோ்தல் அறிக்கையில் அறிவித்தவாறு மக்கள் நலப்பணியாளா்களுக்குப் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளா் சங்க மாநிலத் தலைவா் செல்லபாண்டியன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

அதிமுக அரசு பழி வாங்கியதால், 13,500 மக்கள் நலப்பணியாளா்கள் 32 ஆண்டுகளாக வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறோம். எனவே திமுக தோ்தல் வாக்குறுதிப்படியும், நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையிலும் எங்களுக்குப் பணப்பலனுடன் கூடிய பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.

உயிரிழந்த மக்கள் நலப்பணியாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரு. 5 லட்சமும், வாரிசுகளுக்கு வேலையும் வழங்க வேண்டும். இந்த வாக்குறுதியை நினைவூட்டும் வகையில், நவம்பா் 9 -ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat