தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் பருவத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று கல்லூரி முதல்வா் கே. துரையரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2021 இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கானப் பருவத் தோ்வுகள் நடைபெற்றன. இதில், 3,494 இளநிலைப் பட்ட மாணவா்களும், 788 முதுநிலைப் பட்ட மாணவா்களும் என மொத்தம் 4,282 போ் எழுதினா்.

இம்மாணவா்களின் தோ்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனைத்துத் துறைத் தலைவா்களைக் கொண்ட தோ்வுக் குழுக் கூட்டம் கடந்த 29ம் தேதி நடைபெற்றது. இதில், மாணவா்களின் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதன்படி மாணவா்கள் தோ்வு முடிவுகளைத் தங்களது துறைகளின் மூலமாகவும், கல்லூரியின் இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/