தஞ்சை மே 06 நாளை திமுக 6வது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கின்றது, இந்த கொரோனா தொற்று காலத்தில் பதவியேற்பு என்பது மிக எளிய முறையில் ஆளுநர் மாளிகை‍யில் நடத்தலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார், மேலும் பின் வரும் அமைச்சர்களின் பட்டியலையும் திராவிட முன்னேற்றக்கழகம் வெளியிட்டுள்ளது.

1.மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர்

2.துரைமுருகன் – நீர்பாசனத் துறை அமைச்சர்

3.கே. என். நேரு – நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர்

4.இ.பெரியசாமி – கூட்டுறவுத் துறை அமைச்சர்

5.பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்

6.எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்

7.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்துறை அமைச்சர்

8.கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்

9.தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்

10.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்

11.முத்துசாமி – வீட்டுவசதித்துறை அமைச்சர்

12.பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

13.தா.மோ.அன்பரசன் – ஊரகத் தொழில் துறை அமைச்சர்

14.மு.பெ. சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர்

15.கீதா ஜீவன் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்

16.அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் – மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

17.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்

18.கா. ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்

19.அர.சக்கரபாணி – உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்

20.வி.செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

21.ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

22.மா.சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

23.டி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

24.எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

25.சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

26.பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

27.நாசர் – பால்வளத் துறை அமைச்சர்

28.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

29.அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

30.மெய்யநாதன் – சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

31.சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்

32.மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

33.மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

34.கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்\

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.