தஞ்சாவூர்: மக்கள் பயன்பாட்டிற்காக தனது சொகுசு காரை ஆம்புலன்ஸாக மாற்றி வழங்கியவருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் மகேந்திரன். இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் நிறுவனா். இவா் தனக்கு சொந்தமான சொகுசு காரை ஆம்புலன்ஸாக மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இந்த வாகனத்தின் சேவையை மருத்துவா் நியூட்டன் தொடக்கிவைத்தார். இந்த வாகனச் சேவையை பட்டுக்கோட்டையை உள்ளடக்கிய 30 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து மகேந்திரன் கூறியதாவது: விளம்பரத்துக்காக இதை செய்யவில்லை. கொரோனாவால் அவதிப்படும் மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்வோம் என்ற எண்ணத்தில் எனது காரை ஆம்புலன்ஸாக மாற்றி முற்றிலும் இலவசமாக கொரோனா பாதிக்கப்பட்டவா்களை அழைத்து செல்வதற்காக வழங்கியுள்ளேன் என்றார்.

இவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.