தஞ்சாவூர் அக்.31 -தஞ்சாவூர் பருவமழை எதிர்கொள்ளும் வகையில் அரசு எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மழை காலத்தை எதிர் கொள்ளும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைமை வகித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
பேசியபோது மழை காலத்தை முன்னிட்டு சாலைகளில் மேம்படுத்துவது வடிகால்களை தூர்வாரும் சுகாதார சீர்கேட்டை தடுப்பது போன்றவற்றில் அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும் புயல் பாதுகாப்பு மையத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் இதே போல சமுதாயக் கூடங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்.
மற்றும் கடலோரப் பகுதியில் உள்ள 27 மையங்களிலும் கவனம் செலுத்துவது அவசியம், மழை காலத்தையொட்டி தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தாசில்தார்கள் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, உரத்தட்டுப்பாடு போக்குவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் கேட்டு வரும் விவசாயிகளை நல்ல முறையில் நடத்த வேண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் பேசினார் கூட்டத்தில் இதில் தலைமை கொறடா கோவை. செழியன் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்பி ரவளிப் பிரியா, தஞ்சை எம். பி. எஸ். எஸ். பழனிமாணிக்கம் எம்எல்ஏக்கள் (துரை. சந்திரசேகரன் ) சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோணம்) டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சை) அசோக்குமார் (பேராவூரணி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/