தஞ்சை சூன் 16: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பழமை வாய்ந்த கட்டிடம் புனரமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

லண்டன் தேம்ஸ் நதியின் கரையில் அமைந்த புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தைப் போல காவிரி கரையில் அமைந்தது தான் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி, ஆற்றில் நீரோடும் காலங்களில் அந்த சிறிய பாலத்தில் நடந்து செல்வதும், சிலு சிலு வென வீசும் காற்றும் புதிய கற்றல் அநுபவத்தை தருவதாகும்.

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள 165 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கட்டிடம் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அவருடன் கும்பகோணம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கர், கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் சென்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்