தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான் காடு கிராமத்தை சேர்ந்தவர் காந்திமதி கூலி தொழிலாளி இவர் கணவர் சிங்காரவேலு பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார், இவரின் மூத்த மகனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் இறந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக இளைய மகன் தினேஷ் வயது 25 தனது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டிரைவிங் ஸ்கூல் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார், இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

சவுதி அரேபியா விற்கான டிரைவிங் லைசென்ஸ் இல்லாத நிலையில் அந்த நிறுவனம் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரியில் ஏற்றி வைத்துள்ளனர் அப்போது தினேஷ் நிர்வாகத்திடம் கேட்டபோது விரைவில் லைசென்ஸ் எடுக்க ஏற்பாடு செய்து வழங்கப்படும் எனக் கூறி லாரியை ஒட்டும் பணியை தொடர செய்துள்ளனர்.

இதையடுத்து 2019ஆம் அக்டோபர் 26-ஆம் தேதி நள்ளிரவு தினேஷ் லாரியை ஓட்டிச் சென்றபோது எதிரே வந்த காரின் டயர் வெடித்து தினேஷ் ஓட்டிச் சென்ற லாரி மீது மோதியது இதில் அரேபியர் ஒருவர் இறந்துள்ளார் விபத்தை தொடர்ந்து சவுதி அரேபியா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் இது தொடர்பாக கடந்த 2020 ஜனவரி 20ஆம் தேதி காந்திமதி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

மேலும் தஞ்சாவூர் தொகுதி எம்பி பழனிமாணிக்கம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரிடமும் மனு அளித்துள்ளார் ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தொடர்ந்து மீண்டும் தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் இடம் நேற்று கண்ணீர் மல்க காந்திமதி தனது மகனை மீட்டுத் தர கோரி மனு அளித்தார்

காந்திமதி கலெக்டரிடம் மனு அளித்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது எனது மகன் பணியாற்றிய நிறுவனம் செய்த தவறால் ஓராண்டு சிறையில் இருக்கிறான் விபத்தில் இறந்தவர் மனைவி இந்திய மதிப்பில் 90 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார் தொடர் விசாரணையில் எனது மகனை லைசென்ஸ் இல்லாமல் லாரியை இயக்க வைத்ததற்காக நிறுவனம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் 25 லட்சமும் எனது மகன் 29 லட்சமும் அவதார தொகையை செலுத்தினால் விடுதலை செய்வதாக அறிவித்து ஓராண்டு தண்டனை முடிந்தும் இன்னும் சிறையில் உள்ளார் ஆனால் நிறுவனத்திடம் இதுதொடர்பாக கேட்டால் எவ்வித பதிலும் இல்லை எனவே அரசு உடனே நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.

Open chat