தஞ்சை மே 18: கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
திருவையாறு அருகே திருப்பூந்துருத்தி பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலிருப்பவர்களை தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின்அபுபக்கர் நேரடியாக வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார். மேலும் பேரூராட்சி மூலம் என்னென்ன உதவிகள் செய்கிறார்கள் என்றும் விசாரணை மேற்கொண்டனர்.
அதற்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் பேரூராட்சி மூலம் தினந்தோறும் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது என்றும், கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர். மேலும் உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் நிலை தினந்தோறும் பேரூராட்சி அலுவலர்கள் மூலம் செயல் அலுவலர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து பேரூராட்சி உதவி இயக்குநர் வீட்டில் உட்பகுதிகளில் நடக்கும்போது காலணிகளுடன் நடக்கவேண்டும். முககவசம் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும். உடல்நிலையில் ஏதாவது மாற்றங்கள் தெரியவரின் உடனடியாக பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.