தஞ்சை: கணினி மூலம் சுழற்சி முறையில் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியிலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல்  பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில்  பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த 8 தொகுதிகளுக்கும் வெளி மாநில ஐ.ஏ.எஸ். அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலா்கள் தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

அப்போது, ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் மற்றும் பலர் இருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்

Open chat