தஞ்சாவூர் :டிச,30 – தஞ்சையில். நாகை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 28 இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளார் ஒரு வாரத்திற்கு முன்பாக தனது மகன் வீட்டில் இருந்து ஞாபக மறதியால் வெளியேறி தஞ்சை பெரிய கோவில் அருகே திரிந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று உடல் நல குறைவு ஏற்பட்டு, தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள அலுவலகம் அருகில் அனாதையாகக் கிடந்துள்ளார் இதுகுறித்து ஆட்சியர் கோவிந்தராஜ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது இதையடுத்து கலெக்டர் கோவிந்தராஜ் உடனடியாக சமூக நலத்துறை மற்றும் ரெட் கிராஸ் அமைப்பிற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினர் அதன் அடிப்படையில் போலீசார் மற்றும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது சமூக நலத்துறையில் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் தேவையான உணவு உடை வழங்கப்பட்டது மருத்துவமனையில் முதியவருக்கு தனது ஊர் நாகை மாவட்டம் இலுப்பூர் என்பது மட்டுமே நினைவில் இருந்தது, அவரது புகைப்படத்தை தேடிக்கொண்டு நாகை மாவட்ட சமூக துறை மற்றும் ரெட் கிராஸ் அமைப்பின் உதவியுடன் அவரது வீடு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

மேலும் முதியவர் சுப்பிரமணியம் தஞ்சை மானோஜ் பட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது அதன் அடிப்படையில் நேற்று அவர் குணமடைந்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மாடியில் வசிக்கும் அவருடைய மகன் மலர்க்கொடி வீட்டில் ஒப்படைக்கப்பட்டார்.

தனது தந்தையை ஒரு வார காலமாக காணவில்லை என்று தேடியதாகவும் எங்கே சென்று கஷ்டப்படுகிறார் என மனவேதனையாக இருந்ததாகவும் தற்போது மிகுந்த மன மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்து மலர்கொடி தனது தந்தை கிடைக்க உதவி செய்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்

Open chat