தஞ்சை மார்ச் 19 தஞ்சைமாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பழனிச்சாமி டெல்டா விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்துள்ளதாகவும், திமக மீதும், கலைஞர் மீதும் பொய் பிரச்சாரம் செய்தால் அவருடைய நாக்கு அழுகிவிடும்.

காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்து அதன் உரிமையை காப்பாற்றுவது திமுக தான், தமிழகத்தை அடகு வைத்து துரோகம் செய்தவர்கள் அதிமுக. காவிரி நடுவர் மன்றம் அமைக்க கடந்த 1975 முதல் போராடி இடைக்காலத் தீர்ப்பை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. காவிரியின் கரையில் பிறந்து, உயிர் பிரியும் வரை காவிரி உரிமைக்காக போராடிய தலைவர் கருணாநிதி. வீணாக இதுபோன்ற பேசினால் அவர் நாக்கு அழகி தான் போகும்.

முதலமைச்சர் நான் விவசாயி என்று சொல்வதை ஏற்க முடியவில்லை என பேசி வருகிறார். எனக்கு விவசாயிகளை பிடிக்கம், ஆனால் போலி விவசாயி பிடிக்காது. டெல்லியில் போராடும் விவசாயிகளை இடைத்தரகர்கள் என கொச்சைப்படுத்தும் எடப்பாடி ஒரு விவசாயியா…???பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என கூறிவிட்டு, அதன் உரிமையை பறிகொடுக்கும் எடப்பாடி ஒரு விவசாயி அல்ல., விஷவாயு. திமுக ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும்.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்படும். நெல்லுக்கு 2500 வழங்கப்படும், கரும்பு டன் ஒன்றுக்கு 4000 வழங்கப்படும். இயற்கை வேளாண்மை ஊக்கப்படுத்த வேளாண்துறையில் தனிப்பிரிவு. வேளாண்மைக்கு தடையின்றி இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும். வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். விவசாயிகள் நீதிமன்றத்திற்கு சென்றார்கள், ஆனால் பல ஆண்டுகளாக தள்ளுபடி செய்யாமல், நிதி இல்லை என கூறிக்கொண்டு இப்போது தேர்தல் வருகிற காரணத்தினால் திமுக தலைவரான நான் அறிவித்த பிறகு அவர்கள் விவசாய கடன் தள்ளுபடி அறிவித்துள்ளனர் என பேசிய அவர், அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளவும், நான் தடுப்பு ஊசியும் போட்டுக் கொண்டேன். இது போல் கூட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ளவும், ஒரு அண்ணணாக தம்பியாக கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்

‍செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.