தஞ்சை ஏப்ரல் :30, தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பேராவூரணி , பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதியில் சரவணா தாக்கம் எதிரொலியால் உலகத்தரம் வாய்ந்த தேங்காய் விலை மளமளவென சரிந்தது, தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர், தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் தேங்காய் உலக அளவில் பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளின் இரண்டாவது வாழ்வாதாரமாக விளங்கிவரும் தென்னை சுமார் 60,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தேங்காய் அளவு சுவை மனம் போன்றவைகளின் மூலம் பெயர் பெற்றுள்ளது.

இதன் காரணமாக உலக அளவில் விரும்பப்படும் இப்பகுதி தேங்காய் புகழ்பெற்ற பிஸ்கட் கம்பெனிகளின் தயாரிப்புகளுக்கு விருப்பமாக உள்ளது, இப்படி பெயர் பெற்ற தேங்காய் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் காங்கயம் வெள்ளகோவில் போன்ற வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதியாகி வந்து இந்த நிலையில் விலை முன் எப்போதும் இல்லாத அளவு கடந்த 2017 18 ஆம் ஆண்டு தேங்காய் விலை கிடுகிடு என உயர்ந்து 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனையானது.

அதே சமயம் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு கரைகடந்த கஜாபுயல் சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த தென்னையில் 1.50 லட்சம் தென்னை மரங்களை வேரோடு சாய்ந்தது டப்பிங் என்ற தென்னை மரங்களும் தேங்காய் பிள்ளைகள் காம்பு பகுதி காற்றின் வேகத்தில் அசைந்து சென்றதால் புயலுக்கு பின் மிகக் குறைந்த அளவில் பெறப்படும் தேங்காய் எண்ணெய் சத்து இன்றி எடை குறைந்து தரம் குறைந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்று வியாபாரிகள் விரும்பி கொள்முதல் செய்யவில்லை.

இதனால் விலை சரிந்து கடந்த 20 மாதங்களாக 10 முதல் 12 ரூபாய்க்கு விற்பனையானது இதனால் தேங்காய் உற்பத்தி குறைந்தது போதுமான விலையும் கிடைக்கவில்லை இதனால் வருமானம் இன்றி கடைமடை தென்னை விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தனர் கடந்த 20 மாதங்களாக தென்னை விவசாயிகளின் கடும் உழைப்பால் தப்பி நின்ற தென்னை மரங்களில் என்னை சற்று மற்றும் எடையுடன் கூடிய தேங்காயை உற்பத்தி செய்தனர்.

உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தாக்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் தென்னை விவசாயிகளுக்கு சோதனை களமாக மாறியது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வு வெளிநாடு வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பத்து ரூபாய் விற்ற தேங்காய் கடந்த இரண்டு மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையானது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கண்திறந்த தேங்காய் விலை ஏறிய வேகத்தில் தற்போது மீண்டும் தாக்கத்தின் எதிரொலியாக மளமளவென சரிந்து 10 ரூபாய் முதல் 12 ரூபாய்க்கு விற்பனையாகிறது, இதனால் விலை சரிவால் பட்டுக்கோட்டை பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒரத்தநாடு தென்னை விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.