தஞ்சை பிப்18. தஞ்சையில் பள்ளி அக்ரஹாரம் வெண்ணாற்றங்கரை இப்பகுதியை கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் மேற்பார்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர், அப்போது வெண்ணாற்றங்கரை ஏற்கனவே டாஸ்மார்க் கடையில் இருந்த பகுதியில் கஞ்சாவுடன் ஒரு கும்பல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்த உடன் 6 பேர் கொண்ட கும்பல் தப்பிச் செல்ல முயற்சி செய்தது, ஆனால் அதற்குள் அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர், இருந்தாலும் ஒருவர் மட்டும் தப்பி சென்றுவிட்டார், மற்ற 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அதில் பள்ளியாகிரகரம் நகரை சேர்ந்த ஜெயபாண்டியன் வயது 34, அம்மாபேட்டை வெங்கடேஸ்வரன், பாண்டி அம்மா வயது 45, கும்பகோணம் பாலக்கரையில் சேர்ந்த சங்கர் 34, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த வரி பாண்டி 20, அவருடைய தாயார் அன்னப்பிள்ளை 46 ஆகியோர் என்பதும் தெரியவந்தது அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சா விற்பதற்காக பயன்படுத்தப்பட்ட கார் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து முன்னும் பின்னும் போலியாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரில் கஞ்சாவை வைத்து விற்பனை செய்துள்ளனர் போலீசார் கண்காணிக்க இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளனர் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.