தஞ்சாவூர் : தஞ்சையை அடுத்த பனவெளி வெண்ணாற்று பாலம் அருகே வாலிபர் தனது உறவினரான பெண் ஒருவருடன் பைக்கில் சென்றார். அப்போது அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாளால் வாலிபரை வெட்டி விட்டு செல்போன் மற்றும் பணத்தையும், பெண்ணிடம் இருந்து நகையையும் பறித்து சென்றனர்.

இதுகுறித்த தகவல் தஞ்சை மாவட்ட ழகட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு நெடுஞ்செழியன் மற்றும் கான்ஸ்டபிள் ராஜ்குமார் ஆகியோர் குற்றவாளிகளின் இருசக்கர வாகனத்தை அடையாளம் கண்டு விரட்டிச் சென்றனர்.

மேலும் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த ஏட்டு கலியராஜ் போலீஸ்காரர் முரளி ஆகியோர் உதவியுடன் இரண்டு குற்றவாளிகளையும் 8 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர். தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, செல்போன், பணத்தையும் மீட்டனர்.

துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா நேரில் அழைத்து அவர்களது பணியை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/