தஞ்சாவூா்: தஞ்சாவூரில் பழங்கால தூக்கு மேடையை இடிக்கப் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூா் செவ்வப்பநாயக்கன் ஏரி மேல் கரையில் பழமையான கட்டடம் உள்ளது. செங்கல் கட்டுமானமாகக் காணப்படும் இக்கட்டடம் தூக்கு மேடை என அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது தூக்கு மேடையாக இருந்ததற்கான ஆவணக் குறிப்பு எதுவும் கிடைக்கப் பெறவில்லை என வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இக்கட்டடத்தை இடித்துவிட்டு விற்பதற்காகச் சிலா் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அவா்களைத் திருப்பி அனுப்பினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ட்டது.

இதுகுறித்து பெரியகோயில் உரிமை மீட்புக் குழுப் பொருளாளா் பழ. ராசேந்திரன் கூறுகையில், இந்தத் தூக்கு மேடையை யாரும் ஆக்கிரமிக்காதவாறு அப்பகுதியில் உள்ளவா்கள் பாதுகாத்து வருகின்றனா். இந்நிலையில் திடீரென சிலா் இதை எங்களுக்குரியது எனக்கூறி இடித்து அகற்ற முயற்சி செய்கின்றனா்.

இதை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். மேலும், இந்த இடத்தைத் தொல்லியல் துறையினா் ஆய்வு செய்து, எஞ்சியுள்ள கட்டுமானத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.