தஞ்சாவூர்அக்,25- தஞ்சை சமுத்திரம் ஏரி ரூபாய் 8.84, கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தொடங்க உள்ளது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் புளியந்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள சமுத்திரம் ஏரி புனரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது.

சமுத்திரம் ஏரி சோழ மன்னர் ராஜராஜ சோழனால் அமைக்கப்பட்ட தாகும் சோழ அரசு பெருந்தேவி குந்தவை நாச்சியார் அரண்மனையின் அருகே கடலினை பார்க்க விரும்பியதையடுத்து ராஜராஜசோழன் உடனடியாக அரசிக்காக மிகப் பெரிய ஏரியை வெட்டும் பணியை தொடங்கி அதில் நீரை நிரப்பி கடல் போன்று காட்சியளிக்கும் சமுத்திரம் ஏரியை அமைத்தார் என வரலாறு சொல்கிறது.

கல்லணை கால்வாய் பாசனம் அமைத்து அமைந்துள்ள ஏரிகளில் சமுத்திரம் ஏரி மிகப் பெரிய ஒன்றாகும் சமுத்திரம் ஏரி தஞ்சாவூர் நகரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது இந்த ஏரியின் மூலம் 6 கிராமங்களில் உள்ள ஆயிரத்து 1116 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

அத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஏரியின் மிக அருகில் அமைந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர் தஞ்சாவூரை அடுத்து அதன் அருகிலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வருகை புரியும் கிராம மக்கள் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்த சமுத்திரம் ஏரி ஒரு பொழுதுபோக்கு தலமாக மாற்றி தரவும் அதில் படகு சவாரிக்கு சிறுவர் பூங்கா நடைபாதை மேடை ஆகியவற்றை அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இந்த சமுத்திரம் ஏரியினை தூர்வாரி அழகு படுத்துவதன் மூலம் ஏரியின் கொள்ளளவு அதிகமாக இடம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு அதற்கான திட்டமும் முன்மொழியப் படுகிறது அத்துடன் ஏரியில் தலைப்பு மதகு மற்றும் உபரி நீர் கலிங்கு வடிந்து மறுகட்டுமானம் செய்யவும் ஏரியின் கரைகளில் பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு வசதிகளை அமைப்பதன் மூலம் புன்னை நல்லூருக்கு வருகை புரியும் பக்தர்கள் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் ஏரியில் அமைக்கப்படும் நடை பாதையில் செல்லும்போது ஏரியின் அழகினை ரசிக்க இயலும் எனவே படகு சவாரி செல்ல வசதியாக ஏரியை ஆழப்படுத்தவும், சிறுவர் பூங்கா சிறுவர் விளையாட்டுத்திடல் அழகு விளக்குகொளிகள் அமைத்தல் புல்வெளி அமைப்பு பார்வையாளர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய நடைமேடை வசதி ஆகியவற்றை திட்டமிடப்பட்டுள்ள.

இப்பணிக்காக 2020-2021, நிலைப்பள்ளியில் அட்டவணையின்படி ரூபாய் 8. 84, கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார் ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் உதவிப் பொறியாளர் அன்புச்செல்வன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் அறிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.