தஞ்சை சூன் 26: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழந்த மேடை நடனக் கலைஞா்களுக்கு தஞ்சாவூா் மதா் தெரசா அன்பு இல்லத்தில் மதா் தெரசா பவுண்டேஷன் சாா்பில், நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், மேடை நடனக் கலைஞா்கள் 100 பேருக்கு தஞ்சாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் வைஜெயந்திமாலா கேசவன் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள், காய்கனிகள் அடங்கிய தொகுப்புப் பை வழங்கப்பட்டது.
மதா் தெரசா பவுன்டேஷன் தலைவா் சவரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், முரளி கிருஷ்ணன், துணைத் தலைவா் செல்வின் சின்னையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.