தஞ்சாவூர் நவ 18: நவம்பர் 18 இன்று கப்பலோட்டிய தமிழர் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85வது நினைவு நாள் ஆகும்.

செல்வச்சீமானாக பிறந்து நாட்டிற்காக உழைத்து மறைந்தவர், மிகச்சிறந்த செயல் வீரர் ஆவார், வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கியவர். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் “சுதேசி பிரச்சார சபை”, “தர்ம சங்க நெசவு சாலை”, “தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்”, “சுதேசிய பண்டக சாலை“, “வேளாண் சங்கம்” போன்றவற்றை ஏற்படுத்தியவர்.

இந்தியாவின் முதல் வேலை நிறுத்தம் வ.உ.சி அவர்களின் கைதினால் 1908 ஆம் ஆண்டு நடைபெற்றது, அதில் காவல் துறையின் துப்பாக்கி சூட்டினால் 4 பேர் இறந்தனர், அதனை திருநெல்வேலி எழுச்சி என்று அ‍ழைத்தனர்.

தன் உடல், உயிர், உணர்வெங்கும் விடுதலை எழுச்சியோடு வாழ்ந்த வ.உ.சி அவர்கள் 1936 ஆம் ஆண்டு நவம்பர் 18ல் மறைந்தார். வ.உ.சி அவர்களின் உழைப்பை இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பாக பதிவு செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நிருபர் தஞ்சை டுடே.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.