தஞ்சாவூர் ஆக :20 -தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் ரத்னா விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குவதற்கு சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு கலை சமூக பணி பொது சேவை அறிவியல் மற்றும் பொறியியல் வர்த்தகம் மற்றும் தொழில் மருத்துவம் இலக்கியம் மற்றும் கல்வி அரசின் குடிமைப்பணி விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதி உடையவர் அவர் பத்ம விருதுகள் பத்ம விபூஷண் பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட உள்ளது.

விருதுகள் அடுத்த ஆண்டு 2022 ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது எனவே தஞ்சை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற இணையதள முகவரிகள் என்ற www padmaawards.gov.in இணையதள முகவரி மூலம் மட்டுமே அடுத்த மாதம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் கூடுதல் விவரங்கள் பெற 04362- 23 56 33 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.