தஞ்சை மே 30: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த தஞ்சை பெண் நீதிபதியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள மக்கள் நீதிமன்ற நிரந்தர தலைவராக கடந்த ஐந்தாம் தேதி என்று பொறுப்பேற்றவர் நீதிபதி வனிதா. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார்.

நீதிபதி வனிதாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்ததோடு அவருடைய குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி நிலையில் மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்).
பணியாற்றிய நீதிபதி வனிதா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு, நீதித்துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.