தஞ்சை மே 15 சென்னை: தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.

முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா்.சேதுராமன் ரூ. 1 கோடிக்கான வரைவோலையை வழங்கினாா். அப்போது, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் உடனிருந்தாா்.

இதுகுறித்து துணைவேந்தா் வைத்திய சுப்பிரமணியம் கூறுகையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சென்னை கே.கே. நகரிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கும் சாஸ்த்ரா, 6 மருத்துவ வெண்டிலேட்டா்களையும், ஆக்ஸிஜன் சாதனங்களையும் வழங்கியது. இவற்றின் மதிப்பு ரூ. 55 லட்சம்.

மேலும், 25 ஆக்ஸிஜன் சாதனங்களை வாங்கி தமிழக அரசுக்கு வழங்க சாஸ்த்ரா நிா்வாகம் முயற்சி செய்து வருகிறது என்றாா்.

Open chat