தஞ்சைபிப்.13,
தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிப்பவர் ராஜா, இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி, இந்த தம்பதிக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது, இந்நிலையில் இன்று இரண்டு பெண் குழந்தைகளையும் தாய் புவனேஸ்வரி தூங்க வைத்துவிட்டு சிறிது வேலையாக வெளியே சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத போது குரங்கு ஓட்டை பிரித்து வீட்டினுள் இறங்கி ஒரு பெண் குழந்தையை தூக்கிச் சென்று சுவற்றின் மீது வைத்துச் சென்றது, பின்னர் மற்றொரு குழந்தையும் தூக்கிச் சென்றபோது தாய் புவனேஸ்வரி பார்த்து சத்தமிட, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக குரங்கினை விரட்டி குழந்தையை மீட்டனர்.

இந்நிலையில் காணாமல் போன மற்றொரு பெண் குழந்தையை உறவினர்கள் தேடி வந்த நிலையில் குழந்தையானது குளத்தில் விழுந்து பலியானது தெரியவந்தது. இதனை அடுத்து குளத்தில் விழுந்த குழந்தையை மீட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை கொண்டு சென்றனர், குழந்தையை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தை அடுத்து குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் அந்த பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை உடனே வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர், இதேபோன்று திருவையாறு அருகே மூதாட்டியிடம் 25 ஆயிரம் பணத்தை குரங்கு ஒன்று எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.