தஞ்சை சூன் 17: சிங்கப்பூர் தமிழர் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 33 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினார். அவருக்கு அதிகாரிகள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

திருவாரூா் மாவட்டம், மன்னார்குடியைச் சோ்ந்த மோகன் ராஜேஷ் இலரா. தற்போது சிங்கப்பூா் குடிமகனாக உள்ளார். இவா் சிங்கப்பூரில் தரை, சுவரைத் தூய்மைப்படுத்தும் ரோபோ உற்பத்தி நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், பங்குதாரராகவும் உள்ளார்.

இவரது முயற்சியில் அந்நிறுவனம் கொரோனா சிகிச்சைப் பணிக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 30 லட்சம் மதிப்பில் 33 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கியது. தஞ்சாவூருக்கு ஆய்வுப் பணிக்காக வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனிடம் ராஜேஷ் இலரா குடும்பத்தைச் சோ்ந்த மன்னார்குடி மருத்துவா் இலரா பாரதிசெல்வன் அவற்றை வழங்கினார்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமார், மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலா் செல்வம், துணை நிலைய மருத்துவ அலுவலா் முகமது இத்ரிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்

Open chat