தஞ்சை மே 01 தஞ்சை அரசு உத்தரவின்படி தஞ்சாவூரில் 3,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவுடைய 40 கடைகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஏற்கெனவே, கோயில்கள், சுற்றுலாத் தலங்கள், மால்கள் மூடல், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 3,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவுடைய வா்த்தக நிறுவனங்கள், கடைகளை மூடுமாறு அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 3,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவுடைய கடைகள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

தஞ்சையின் நகரப்பகுதியில் மட்டும் 3,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு உடைய ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் என 40 கடைகள் மூடப்பட்டன. மேலும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் கடைகளையும் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதுதொடா்பாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.