தஞ்சை பிப்.16,   தஞ்சை இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்,சார்பில் சாலை போக்குவரத்து மாநிலத் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்,சிஐடி யூ மாவட்ட செயலாளர் ஜெயபால் முற்றுகை போராட்டத்தின் நோக்கங்களை கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார், நிகழ்வில் சாலை போக்குவரத்து சங்க நிர்வாகிகள் ஆட்டோ சங்க நிர்வாகிகள் சிஐடியூ பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களை இயக்க தடை விதித்திருப்பது நீக்கவேண்டும், மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், ஸ்டிக்கர் ஸ்பீடு கார்னர் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, காவல்துறையினர் ஓட்டுநர் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதை கைவிட வேண்டும், வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.

முறைசாரா நல வாரியத்தை முறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தை சாலை போக்குவரத்து ஆட்டோ மோட்டார் தொழிலாளர்கள், சுமார் 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை