தஞ்சை மே 17 தஞ்சை கொரோனாவோடு சேர்ந்து கோடை வெயிலும் மக்களை மிரட்டி வந்த நிலையில் நேற்று இரவு ஏழு மணி அளவில் தஞ்சையில் பலத்த மழை பெய்தது கோடைக்காலத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை பெய்து வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

பலத்த மழை விட்டுவிட்டு ‍இடி மின்னலுடன் பெய்தது, அதனால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மாவட்டத்தில் இப்பொழுது விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்து உள்ளனர், மேலும் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மழை பெய்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, நாஞ்சிக்கோட்டை, விளார், மருங்குளம், குருங்குளம், சூரியம்பட்டி, நடுவூர், மாதா கோட்டை கருக்காக்கோட்டை, வல்லம், திருக்காட்டுப்பள்ளி, மற்றும் பூதலூர் பகுதிகளில் மழை பெய்தது. கடும் வெயிலிலிருந்து தப்பிக்க கோடை மழை பெய்யாதா? என்று ஏங்கியிருந்த மக்களுக்கு இந்த கோடை மழை மகிழ்ச்சியை கொடுத்ததுள்ளது, கோடை உழவும் மும்முரமாக நடந்து வருகின்றது.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை.