தஞ்சை ஏப்ரல் 25 தமிழகத்தில் ஞாயிற்றுகிழமையான இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 4 மணி வரை 30 மணி நேரம் இந்த ஊரடங்கு நீடிக்கிறது நேற்று இரவே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

இன்று எந்த கடைகளும் திறக்கப்படவில்லை தஞ்சை காந்திஜி சாலை பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் ரயிலடி ரயில்வே கீழ் பாலம் உள்பட அனைத்து பகுதிகளும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தஞ்சை காந்திஜி சாலை அண்ணா சிலை பகுதியில் காவல்துறையினர் பேரிகார்டுளை கொண்டு தடுப்பு அமைத்து முழு ஊரடங்கின் போது இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில் வருகிறவர்களை கண்காணித்து மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதிக்கின்றனர் மற்றவர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர் தஞ்சையில் பல்வேறு இடங்களிலும் எந்தவித கெடுபிடியும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.