தஞ்சை பிப் 09 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2017-ல் உச்சநீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது.
இந்த சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா, இளவரசி விடுதலையாகினர். சுதாகரன் இன்னமும் அபராத தொகையை செலுத்தவில்லை. அபராத தொகையை சுதாகரன் செலுத்திவிட்டால் அவரும் சிறையில் இருந்து விடுதலையாவார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் இளவரசி, சுதாகரனின் சொத்துகள் பலவற்றை தமிழக அரசு அதிரடியாக பறிமுதல் செய்தது.
நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருவருக்கும் சொந்தமான மேலும் சில சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தஞ்சை வ. உ .சி., நகர் பகுதியில் உள்ள 26 ,540 சதுர அடி காலி மனையை அரசு இன்று காலை பறிமுதல் செய்துள்ளது. இது அரசுடமையாக்கப்பட்டது எடுத்து அதிலிருந்து வரக்கூடிய வாடகை வாடகை நிலுவைத் தொகை ஆகியவை அரசுக்கு சொந்தமாகும்.
இந்த சொத்து கடந்த 1995 ஆம் ஆண்டு 11 லட்சத்திற்கு வாங்கப்பட்டது கடந்த 14 2 2017 அன்று வழங்கப்பட்ட உச்சநீதி மன்ற இறுதி தீர்ப்பின்படி அரசு அமைக்கப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.

Open chat