தஞ்சை பிப் 11 தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் ரயிலடி பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட தஞ்சை பகுதிகளில் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது இது தொடர்பாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் மூன்று உலகங்களும் மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் ஒரு விளக்கம் தமிழ் பல்கலைக்கழக ஒரு சமயத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தஞ்சை டிஐஜி ரூபேஷ்குமார் மீனா போலீஸ் சூப்பிரண்டு தேஷ் முக்சேசேகர் சஞ்சய், உத்தரவின்பேரில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜா மேற்பார்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர் இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரும் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர் அவர்களை தனிப்படை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர் .

அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் திருச்சி ராம்ஜிநகர் சேர்ந்த குணசேகரன் (30) திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த ராமையா பட்டியை சேர்ந்த ரகுபதி (25) என்பது தெரியவந்தது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர் கைதான அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த கைக்கடிகாரம் மடிக்கணினி கைப்பை பணம் நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன இவற்றின் மதிப்பு ரூபாய் 4 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர் இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளையடித்தது எப்படி என இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அளித்துள்ளனர் கைது செய்யப்பட்ட குணசேகரன், ரகுபதி மற்றும் தலைமறைவாக உள்ள அவர் மீது திருச்சி நாமக்கல் ஈரோடு உள்ளிட்ட மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

காரில் வலம் வரும் கொள்ளையர்கள் நகைக்கடை சுற்றுலாத்தலங்கள் கோவில்கள் ஓட்டல்கள் போன்ற இடங்களுக்கு காரில் வருபவர்களை நோட்டம் விடுவார்கள் அப்போது காரில் வருபவர்கள் தங்கள் உடை மைகளை காரில் வைத்துவிட்டு செல்கிறார்களா? ‘என்றும் கண்காணிப்பார்கள் பின்னர் அவர்கள் காரில் இருந்து சென்றதும் கார் கண்ணாடியை நூதன முறையில் உடைத்து உள்ளே இருந்த பொருட்களை கொள்ளையடித்து செல்வார்கள்.

அப்போது ஒருவர் யாரும் வருகிறார்களா, என நோட்டமிடுவார். மற்றொருவர் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இன்னொருவர் காரை தயார் நிலையில் வைத்திருப்பார் சில நிமிடங்களில் அவர்கள் கொள்ளையடித்து விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று விடுவார்கள் மேலும் இவர்கள் வெளி மாநிலங்களுக்கும் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.