காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த பெருமழையால் சம்பா சாகுபடி பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முற்றிலும் அழிந்துவிட்டது.ஒரு சில இடங்களில் அறுவடை செய்யப்படும் நெல் ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு முட்டை 6 மூட்டைகள் வீதம் மகசூல் கிடைத்து வருகிறது.

அந்த நெல் மிகுந்த ஈரப்பதத்தோடு இருப்பதால் விற்க முடியவில்லை, இந்த நிலையில் அதனை உலர்த்தி கொள்முதல் செய்யும் நிலைக்கு கொண்டு வருவதற்கான ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் செய்வதறியாது திகைத்து போய் உள்ள விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இ ஆப அவர்கள் தனது சொந்த முயற்சியில் நவீன இயந்திரத்தை தருவித்துள்ளார். அதனை ஒரத்தநாடு ஒன்றியம் பொன்னாப்பூர் கிழக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வின் அடிப்படையில் இயக்கிப் பார்த்து சோதனை செய்தார்.

ஒரு மணி நேரத்திற்கு இரண்டுடன் நெல்லில் மூன்றரை சதம் அளவிற்கான ஈரப்பதத்தை உலர்த்தும் தன்மை உள்ளதை நேரில் ஆய்வு செய்து உறுதி செய்தார், இந்நிகழ்ச்சியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் தஞ்சை மாவட்ட தலைவர் துரை பாஸ்கரன் மாவட்ட செயலாளர் எம் மணி திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் விபி பாலமுருகன் உயர்மட்டக்குழு உறுப்பினர் கச்சனம்ரவி தவமணி உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றனர்.

ம.சசிக்குமார், நிருபர்.
தஞ்சை

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.