தஞ்சாவூர் மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகம் யுனிசெப், தமிழக அரசின் பொது சுகாதார & நோய்த்தடுப்பு மருந்து இயக்ககம் ஆகியவை சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தஞ்சாவூரில் தொடங்கியது, இதில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் ,நகர் நல அலுவலர் நமசிவாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் .


மத்திய அரசு  கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ,இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது .45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி முறையை அமல்படுத்தியுள்ளது.
 இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தஞ்சாவூர் மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சி  தஞ்சாவூர் ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கியது, இதில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் உள்ளிட்டவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


 நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மக்கள் தொடர்பு கள அலுவலக உதவியாளர் அருண்குமார் ஆகியோர் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . கொரோனா தடுப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.


மேலும் தஞ்சாவூர் கல்லுகுளம் மற்றும் கரந்தை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


 மருத்துவமனைகளில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் எடுத்துரைத்தார். நகரின் முக்கிய பகுதிகளான  ரயில் நிலையம் ,தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் ,பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.