தஞ்சாவூர் டிச 8 தஞ்சை மாவட்டத்தில் படைவீரர் கொடிநாள் நிதியாக ரூபாய் 65 லட்சம் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர்கள் கொடி நாள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த திறனுடையது 18 பேருக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தி ஆறு லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து 295 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார் பின்னர் அவர் கூறியதாவது கடந்த 1949ஆம் ஆண்டு முதல் தேசமெங்கும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி படைவீரர் கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது நாட்டுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் படைவீரர் குடும்பத்தினர் மறுவாழ்வு நலனுக்காக படையில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் நலனுக்காக செலவு செய்யப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு கொடிநாள் நிதி இலக்கு ரூபாய் 54 லட்சத்து 32 ஆயிரத்து ஆகும் ஆனால் இலக்கை மிஞ்சி ரூபாய் 64 லட்சத்து 18 ஆயிரத்து 900 வசூல் செய்யப்பட்டது. இது 118 சதவீதம் ஆகும் இந்த ஆண்டிற்கு கொடிநாள் நிதியாக ரூபாய் 65 லட்சத்து 18 ஆயிரத்து வசூலித்துள்ளதாக தஞ்சை மாவட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் அதிக அளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார் நிகழ்வில் கூடுதல் கலெக்டர் வருவாய் சுபத்ரா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி முன்னாள் படைவீரர் நல துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன்,அது மாவட்ட ஆட்சியரின் நேர்முக அது மாவட்ட ஆட்சியரின் நேர்முக ரங்கராஜன் முப்படை வீரர்களின் தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சையை அடுத்துள்ள ஆலங்குடி ஊராட்சியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உள்ள இடத்தை தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அப்போது தேவையான மின்சாரம், சாலை, குடிநீர் வசதிகளை செய்ய ஆணையை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆய்வின்போது தாசில்தார் மணிகண்டன் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் அறிவானந்தம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வைத்தீஸ்வரன் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.