தஞ்சை மே, 25, கொரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக பணி புரிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை ஆட்சியர் கோவிந்தராவ் வழங்கினார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக பணி புரிய உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பணி நியமன ஆணைகளை எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டிகேஎஸ் நீலமேகம், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆட்சியர் கோவிந்தராவ், துரை சந்திரசேகரன் திருவையாறு எம்.எல்.ஏ, டி கே ஜி நீலமேகம் தஞ்சை எம்எல்ஏ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் மருது துரை, தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்பார்வையாளர் பொறியாளர் விஜயகவுரி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் (பொறுப்பு) தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பணிச்சான்றிதழ் வழங்கிய போது

பணி ஆணையை வழங்கிய பின்னர் துரை – சந்திரசேகரன், நிருபர்களிடம் கூறியதாவது. தஞ்சை மருத்துவக் கல்லூரியில், இக்குழு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தலா 100 டாக்டர்கள் செவிலியர்கள் 57 மருத்துவ உதவியாளர்கள் மாவட்ட நலச் சங்கம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இன்று முதல் பணியைத் தொடங்குவார்கள் மருத்துவர்களின் தேவையை கருதி முதலமைச்சரின் உத்தரவு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார் முன்னதாக மின்சார வாரியத்தில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு தஞ்சை மாநகராட்சி சார்பில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி அங்காடிகளில் கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.

Open chat