தஞ்சாவூர் செப் 11: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, உயர்நீதி மன்றம் சிலை கரைப்பு தனிநபராக சிறிய நீர்நிலைகளில் தான் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக விநாயகா் சதுா்த்தி விழாவின்போது பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கத் தமிழக அரசுத் தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி தஞ்சாவூா் ரயிலடி, காந்திஜி சாலை, சீனிவாசபுரம் உள்பட பொது இடங்களில் 14 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டன.

இவற்றை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் பறிமுதல் செய்து, வேனில் ஏற்றிச் சென்று அந்தந்த பகுதியிலுள்ள கோயில்களில் வைத்தனா். இதேபோல, மாவட்டத்தில் இந்து அமைப்பு நிா்வாகிகளின் வீட்டு முன் உள்பட பொது இடங்களில் 110 சிலைகள் வைக்கப்பட்டன. இவற்றில் பல சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சிலைகள் நேற்று மாலை அந்தந்த பகுதியிலுள்ள நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன. தஞ்சாவூரில் விஸ்வரூப விநாயகா் சதுா்த்தி விசா்ஜன விழாக் குழு சாா்பில் குழுத் தலைவா் ஜெய்சதீஷ் தலைமையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளா் விநாயகம், பொருளாளா் ரங்கராஜன் ஆகியோர் விநாயகா் சிலைகளை மகா்நோன்புசாவடியிலிருந்து ஊா்வலமாக எடுத்துச் சென்று பயணியா் மாளிகை அருகே கல்லணைக் கால்வாயில் கரைத்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat