தஞ்சாவூர்: ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான நிதி மோசடி புகாரில் காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு அனைத்தும் விசாரிக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தஞ்சை காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில் காவலர்கள் பயன்படுத்திய பழமை வாய்ந்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைப்பதற்கான பணிகளை திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் புகார்கள் வந்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போலீஸ் கஸ்டடியில் எம் ஆர் கணேசனை எடுத்து விசாரணை நடந்து வருகிறது.

மக்கள் இழந்த பணத்தை பறிமுதல் செய்வதற்கும், அந்த பணத்தை அவர்கள் எந்தெந்த வழியில் என்ன செய்திருக்கிறார்கள் என்பது குறித்து புலன் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம், இதுவரை 20 கோடி ரூபாய் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 15 கோடி ரூபாய் மோசடி குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும் அதன் தொடர்பான முதற்கட்ட விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடியில் காவல்துறையினரும் மீதான புகார்கள் எழுந்திருப்பது தொடர்பான கேள்விக்கு புலன் விசாரணையில் என்னென்ன வருகின்றதோ அனைத்தையும் விசாரிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.