தஞ்சாவூர் சூலை 29: மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை இந்திய ஒன்றிய அரசு தடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்எல்ஏ வுமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

நீட் தோ்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரப்படும் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்படி, தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு, நீட் போன்ற திட்டங்கள் யாவும் இந்திய ஒன்றிய அரசின் ஆளுகையில் கீழே உள்ள‍து.

பெட்ரோல், டீசல் விலையை ஆட்சிக்கு வந்தால் குறைப்பதாகக் கூறியதை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.

அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்திய ஒன்றிய மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், அதைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Open chat