தஞ்சாவூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா பாதித்து இறந்த நிலையில் வருமானத்திற்கு வழியின்றி தவிப்பதால் அரசு பணி கேட்டு மகனுடன் வந்து பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தன் குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் கொரோனாவால் பாதித்து இறந்ததால் வருமானமின்றி தவிப்பதாகவும், தனக்கு அரசு வேலை கேட்டு மகனுடன் வந்த பெண் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் இமானுவேல் விமல் ராஜ் (44). இவருடைய மனைவி எஸ்தர் ருஷ்யா (40). இவர்களுக்கு ஜாஷ்வா, ஜோய் ஆபிரகாம் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் 14-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இமானுவேல் விமல்ராஜ் இறந்தார். மேலும் இமானுவேல் விமல்ராஜின் தந்தை ஜெயராஜ் (77), தாயார் கிளாரா (75) ஆகியோர் வரும் 17-ந் தேதி கணவர் மரணம் அடைந்தனர்.

இதையடுத்து எஸ்தர் ருஷ்யா மற்றும் அவருடைய மகன்கள் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பினார். ஜெயராஜும், கிளாராவும் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இந்த நிலையில் ஒரே குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த 3 பேர் உயிர் இழந்ததால் எஸ்தர் ருஷ்யாவால் வருமானமின்றி குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் எஸ்தர் ருஷ்யா வேலை இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் எஸ்தர் ருஷ்யா தனது மகனுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்துள்ளார். அதில் எனது வருமானம் ஈட்டி வந்த 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததால் நாங்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறோம்.

எனவே இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் எனக்கு ஏதாவது அரசு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்து கொண்டுள்ள எனது மகன்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Open chat