தஞ்சை பிப் 26 திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற உலகத் திருக்குறள் மூன்றாவது மாநாட்டில் தமிழறிஞர்கள் கோரிக்கை.

தமிழ்த்தாய் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு அரசு உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக திருக்குறள் மூன்றாவது மாநாடு 2021 தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்வாக திருவள்ளுவர் சிலை தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாநாட்டு பந்தலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பேரணியில் திருவள்ளுவரை போன்று வேடமணிந்து அவர்களும் திருக்குறளை வாசித்தபடி ஊர்வலம் என்பது சென்றது. பின்பு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தங்கத்தினாலான திருக்குறள் ஓலைச்சுவடி மிகச் சிறிய அளவிலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் திருவையாறு திருவருள் கல்லூரி மாணவ மாணவிகள் திருக்குறள் பாடலுக்கு நாட்டியமாடி அஞ்சலி செலுத்தினர். திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் பெருமைகளை உலகறிய செய்யும் வகையில் இசை பாட்டு மன்றம் பொது அரங்கம் கருத்தரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றது.

இதில் தமிழ் பேராசிரியர்கள் பன்னாட்டுத் தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல் மாநாடு இலங்கையிலும் இரண்டாவது மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில் மூன்றாவது திருக்குறள் மாநாடு தஞ்சையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நான்காவது மாநாடு துபாயிலும் ஐந்தாவது மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

நிகழ்ச்சியில் முக்கிய தீர்மானமாக திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என ஒருமனதாக அறிவித்தனர்.இவ்வாறு நிருபர்களுக்கு உலகத் திருக்குறள் பேரவை ஆதி, நெடுஞ்செழியன். கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.

Open chat