தஞ்சாவூர் நவ 16: தஞ்சை அருகே வல்லம் வட்டாரத்தில் “வீட்டுக்கு வீடு” சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடமாடும் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் சிறப்பம்சமாக 4711 பேருக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முதல்வரின் உத்தரவின் படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரின் சீரிய வழிகாட்டுதலில் தஞ்சை மாவட்டம் வல்லம் வட்டாரத்தில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் இரவு 7மணி வரை நடந்தது.

இதில் சிறப்பம்சமாக 4711 பேருக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி வீடுகள் தேடி சென்று அதிகம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி, மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் ரமேஷ்குமார் வழிகாட்டுதலில், வல்லம் வட்டாரத்தில் 70 இடங்களில் “வீட்டுக்கு வீடு” சென்று போடும் நடமாடும் தடுப்பூசி முகாம் நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், ஒன்றியக்குழு தலைவர் வைஜெயந்திமாலா கேசவன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருளானந்து, பேரூராட்சி செயல் அலுவலர் நவநீத கிருஷ்ணன், அனைத்து ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுகாதார துறையுடன் ஒருங்கிணைந்து முகாம் வெற்றிபெற பணியாற்றினர்.

முகாமிற்கு பேரூராட்சி பணியாளர்கள், உள்ளாட்சி துறை, வருவாய் துறை, கல்வித்துறை, அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஒத்துழைப்பு நல்கி பணியாற்றினார். தடுப்பூசி முகாம்களில் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 4711 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி செலுத்தினர்,

நடமாடும் தடுப்பூசி முகாம்களை அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள், ஊரக உள்ளாட்சி, வருவாய் துறை, அங்கன்வாடி, தன்னார்வலர்கள் ஒத்துழைப்போடு நடந்தது.

நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.