தஞ்சை மார்ச் 5, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில், தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6. ம் தேதி நடைபெற உள்ளது, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் தேர்தல் ஆணையத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களை கவரும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் என்ற தலைப்பில் திருமண அழைப்பிதழ் போல் தாசில்தார் அலுவலக நுழைவு வாயிலில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் தேர்தல் நடைபெறும் நாள் 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், வாக்காளர்கள் அன்பளிப்பு பெற்று வாக்களிக்கக் கூடாது, என்பதை வலியுறுத்தும் விதமாக விளம்பரப் பலகையில் வாசகங்கள் உள்ளன. இந்த வித்தியாசமான விளம்பரப் பலகையை தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் அனைவரும் பார்த்து படித்து செல்கின்றனர், வாக்காளர்களை கவரும் வகையில் திருமண அழைப்பிதழ்கள் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை