தஞ்சை மார்ச் 30 தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1163 வாக்குப்பதிவு மையங்களில் 2886 வாக்குச்சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்தார் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்கு தங்களது வாக்குரிமையை செலுத்த ஏதுவாக அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் சாய்வு தளம் அமைத்து கொடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் வாக்குப் பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வசதி செய்து கொடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக 1163 மையங்களில் 2886 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது தஞ்சை மாவட்டத்தில் வாக்கு பதிவு மையங்கள் அமைந்துள்ள நூத்தி ஆயிரத்து 1163 இடங்களுக்கும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சட்டமன்றத் தேர்தல் பணிக்காக 350 சக்கர நாற்காலிகள் புதிதாக வாங்கப்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் எஞ்சிய நாற்காலிகள் பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள 813 மடக்கு சக்கர நாற்காலிகள் வாக்குப் பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அனுப்பி வைக்கப்படும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் விடுபடாமல் தங்களது வாக்குரிமையை செலுத்தவேண்டும் பார்வையற்றவர்கள் வாக்குப்பதிவு மையங்களில் வழங்கப்பட்டுள்ள ரயில் மாதிரி வாக்கு சீட்டு பயன்படுத்தி வாக்களிக்கவேண்டும் வாக்கு பதிவு மையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் முக கவசம் அணிந்து வந்து வாக்களிக்க வேண்டும் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்தார் முன்னதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு சக்கர நாற்காலி அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.