தஞ்சை பிப்: 2,  தஞ்சை உள்ளிட்ட காவிரி பாசன விவசாயத்தை முடக்கும் வகையில், மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் என்கிற பெயரில் 565 கோடி ரூபாய் செலவில் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை செயல்படுத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்:

திரு. செந்தில்குமார்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 காவிரி பாசன மாவட்டங்கள் மேட்டூர் அணையின் காவிரி நீரை நம்பியே உள்ள நிலையில்மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடிக்கும் மேல் உபரியாக கிடைக்கும் காவிரி நீரை  எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் என்கிற பெயரில் 565 கோடி ரூபாய்க்கும் மேல் சரபங்கா திட்டம் என்கிற பெயரில் தமிழக அரசு திட்டத்தினை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 103 அடி நீர் மட்டுமே இருக்கும் நிலையில் டெல்டா மாவட்டங்களின் பாரம்பரிய காவிரி நீரின் உரிமையை பறித்திடும் வகையில்  டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் சரபங்கா நீர் தேக்க திட்டத்தை எடப்பாடி பழனிசாமி கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்திதஞ்சையில் ரயில் நிலையம் முன்பு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.