தஞ்சாவூர் சூலை 23: தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரத்தில் விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் ரசாயன உரங்கள் வழங்குவதை வேளாண்மை கூடுதல் இயக்குனர் அசோகன் ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் சோழநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 100 சதவிகித மானியத்தில் ரசாயன உரங்கள் வழங்கப்படுவதை சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குனர் (ஆராய்ச்சி) அசோகன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது இருப்பு விபரம் பதிவேடுகள் மற்றும் இலவச ரசாயன உரங்கள் வழங்கும் பதிவேட்டினை பார்வையிட்டார். மேலும் விவசாயிகளிடம் குறுவை தொகுப்பு திட்டம் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என கேட்டு அறிந்தார்.

தஞ்சை வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர், கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் விஜயலட்சுமி, வேளாண்மை அலுவலர் சந்திரசேகர், துணை வேளாண்மை அலுவலர் சாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.