தஞ்சாவூர் ஆக 21: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள புற்றுநோய் பிரிவில் ஏ.எம்.சி லயன்ஸ் சங்கம் பசிப்பிணி போக்கும் சேவையாற்றியது. சங்கத்தின் தலைவர் அமல்.ஸ்டாலின் பீட்டர் பாபு தலைமையில் 125 நபர்களுக்கு உணவு வழங்கி சேவை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் லயன் D. அமிர்தராஜ் அவர்களும் கலந்து கொண்டு சேவை செய்தார்.

மேலும், மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர். செல்வம் மற்றும் துணை அதிகாரி மருத்துவர். முகமது இத்ரீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் முதியோரும், மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்த இரண்டு இரு சக்கர நாற்காலிகள் சுமார் ரூபாய் 30,000 மதிப்பில் வழங்கியும் சேவை செய்யப்பட்டது.

மேலும் தஞ்சாவூர் பூக்காரத்தெருவில் உள்ள கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ 4,000 மதிப்பில் குழந்தைகளுக்கான மூச்சுத்திணறலை சரிசெய்யும் நெபுலைசர் ஒன்று வழங்கப்பட்டது மற்றும் ரூ 4,000 மதிப்பில் ஒரு மேசை ஒன்றும் வழங்கி மேலும் மின்தடை ஏற்பட்டால் அதற்கு மாற்றாக தடையில்லா மின்சாரம் பெற ரூ 18,000 மதிப்பில் இன்வெண்டர் ஒன்றும், நிரந்தரச் சேவையாக சவுதி அரேபிய, ஜெத்தா முத்தமிழ் சங்கத்துடன் இணைந்து சேவைகளாக செய்தனர்.

கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் சுமார் 30 பேருக்கு இனிப்புகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி அவர்கள் கொரானா காலத்தில் செய்த சேவைக்கு அங்கிகாரம் கொடுத்து பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் நிலைய மருத்துவர் மருத்துவர். முத்துக்குமார் அவர்களும் இருந்தார்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் நட்பு நாயகன் PMJF லயன் ஹாஜி S.முகமது ரஃபி, மண்டலத் தலைவர் லயன் G. முரளி, வட்டாரத் தலைவர் Dr. K. ரமேஷ் மாரி உள்ளிட்டோரும் ஏ.எம்.சி லயன்ஸ் சங்கத்தின் லயன் Dr. எஸ்தர் சாந்தினி, லயன் D. அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்தச் சேவையை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து ஏ.எம்.சி அலும்னி லயன்ஸ் சங்கம் செய்திருந்தது.

உலக மனிதநேய நாளான ஆகஸ்ட் 19யில் மக்கள் உயிர் காக்கும் மருத்துவமனைகளுக்கு இச் சேவைகளை மனிதநேயத்துடன் செய்த லயன்ஸ் சங்கத்தினரை முன்னாள் மாவட்ட ஆளுநர் பாராட்டினார்.

செய்தி தஞ்சை டுடே நிருபர்
https://www.thanjai.today/

Newsletter Signup

Subscribe to our weekly newsletter below and never miss the latest product or an exclusive offer.